News Just In

1/25/2021 09:30:00 AM

கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!!


இலங்கையில் மேலும் சில பகுதிகளில் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி கிழக்கு மாகாணத்தின் கல்முனை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை 1 C , கல்முனை 1 E கல்முனை 2 , கல்முனை 2 A, கல்முனை 2 B , கல்முனை 3 A , ஆகிய பகுதிகளிலும் கல்முனை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை 1 MD , மற்றும் கல்முனை குடி 1 , கல்முனை குடி 2 , கல்முனை 3 MD ஆகிய பகுதகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தொட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இலக்கம் 140 பொலான தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் மல்கோனிய பகுதி இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

அத்துடன் பூஜாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பள்ளியகொட்டுவ மற்றும் கல்ஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments: