News Just In

1/05/2021 04:48:00 PM

திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல்!!

எப்.முபாரக்
திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணி மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தில் கொவிட் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளத்தேவையான நடவடிக்கைகள் பற்றி இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக சுகாதார நடைமுறைகளைப்பேணி செயற்பாடுகளை மேற்கொள்வதன் அவசியம் பற்றி இதன்போது அரசாங்க அதிபரால் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் PCR மற்றும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் குறித்த பகுதிகளை சில நாட்களுக்கு பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

மாவட்டத்தில் பல இடங்களில் எழுமாறான PCR மற்றும் ரெபிட் அன்டிஜன் பரிசோதறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் அவதானத்தை கருத்திற்கொண்டு தமது செயற்பாடுகளை சுகாதார நடைமுறைகளை முற்றாக பேணி செயற்படல் மூலம் கொவிட்டிலிருந்து பாதுகாப்புபெற முடியும் என்றும் அநாவசிய பயணங்களில் தவிர்ந்துகொள்வது சாலச்சிறந்தது என்றும் இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


No comments: