News Just In

1/25/2021 10:05:00 PM

திருகோணமலை- பன்குளம், பறையன் குளம் எல்லைக்காளி அம்பாளுக்கு தைப்பூசப் பொங்கல் விழா..!


எப்.முபாரக்
திருகோணமலை, திருக்கோணேஸ்வரத்தின் ஏழு எல்லைக் காவல்   தெய்வங்களில் ஒன்றாக ஸ்தாபிக்கப்பட்டு பரிபாலனம் செய்யப்பட்ட வரலாற்றுப் பெருமை மிக்க பன்குளம், பறையன்குளம் அருள் மிகு எல்லைக்காளி அம்பாள் கோயிலின் வருடாந்த தைப்பூசப் பொங்கல் விழா 28-01-2021 வியாழக்கிழமை இடம் பெறவுள்ளது.

பொங்கல் விழாவை முன்னிட்டு 27-01-2021 புதன்கிழமை காலை 7.00 மணிக்கு பன்குளம் அருள் மிகு சித்தி விநாயகர் கோயிலிலிருந்து மடைப்பெட்டிகள் தூக்கும் வைபவத்துடன் விழா ஆரம்பமாகும்.

மடைப் பெட்டிகள் ஊர்வலமாக முதலிக்குளம் முருகன் கோயில், ஔவைநகர் அம்மன் கோயில், விநாயகர் கோயில் ஆகிய இடங்களினூடாக எல்லைக் காளி கோயிலை வந்தடையும்.

மறுநாள் 28 ஆம் திகதி தைப்பூசத் தினத்தன்று அதிகாலை 4.00 மணிக்கு எல்லைக்காளிக்கு விசேட அபிஷேகம் நடைபெற்று காலை 7.00 மணிக்கு கோயில் முன்றலில் பொங்கல் வளந்து ஏற்றப்படும், தொடர்ந்து விசேட பூசைகள் நடைபெற்று பொங்கல் விழா நிறைவடையும்.

இம் முறை கொவிட் 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக பொங்கல் விழா நடைபெறும் என திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை அறிவித்துள்ளது.

No comments: