மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் எழுந்தமானமான இன்று பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின்படி இன்று 552 பேருக்கு மேற்கொண்டதில் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் மற்றும் தனியார் வங்கியில் கடமையாற்றும் இருவர் உட்பட 3 பேருக்கும், பட்டிப்பளை சுகாதார பிரிவில் 2 பேருக்கும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 16 பேருக்கும், கோறளைப்பற்று மத்திய சுகாதார பிரிவில் 3 பேரும், ஓட்டுமாவடி சுகாதார பிரிவில் ஒருவர் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 288 ஆக அதிகரித்துள்ளதுடன் இவர்களில் 182 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார முறைகளை பேணி செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.

No comments: