ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கொவிட் வைரஸ் பரவலிற்கு மத்தியில் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. கொவிட் வைரஸ் உலகிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படல் வேண்டும். கொவிட்டிற்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பேணி செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும்.அர்ப்பணிப்பு ,வினைத்திறன் ஆகியவற்றை பேணி அரச சேவையை மக்கள் நலனுள்ளதாக மாற்றியமைக்க அனைவரும் திடசங்கற்பம் பூணுமாறும் திருகோணமலை மாவட்டத்தை சகல துறைகளிலும் ஏனைய மாவட்டங்களுக்கு முன்னுதாரணமான மாவட்டமாக மாற்றியமைக்க தமது பங்களிப்பை தவறாது வழங்குமாறும் இதன்போது அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.
திருகோணமலை மாவட்டம் தேசிய ரீதியாக மற்றும் சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் உடைய மாவட்டமாகும். அத்துடன் பல்லினங்களும் சமமாக வாழும் மாவட்டமாகும். இவ்வாறான மாவட்டத்தில் அனைத்து மதத்தலைவர்களின் ஆசியைப்பெற்று அரசாங்க அதிபராக சேவையாற்ற கிடைத்தமையை பாக்கியமாக கருதுவதாகவும் இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதன்போது அரச சேவை கடமைகளை ஆரம்பித்தல் சத்தியப்பிரமாண உறுதியுரை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எம்.ஏ.அனஸ்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன்,உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன் , மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன், பதவிநிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments: