இப்போட்டியில் உணவுத் தொழிநுட்பப் பிரிவில் தங்கவேல் சக்திக்குமார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட 'பருப்பு வடை தயாரிக்கும் இயந்திரம் தங்கப்பதக்கத்தையும் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
தங்கவேல் சக்திக்குமார் மற்றும் அவரது மனைவியான சுதர்சினி சக்திக்குமார் ஆகியார் சேர்ந்து உருவாக்கிய கண்டுபிடிப்பான 'மா வறுக்கும் இயந்திரம்' பொறியியல் துறையில் வெண்கலப்பதக்கத்தையும் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
2019ம் வருடம் சர்வதேச கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் வெள்ளிபதக்கத்தைப் பெற்ற பாடசாலை கண்டுபிடிப்பாளர் சக்திக்குமார் பிரஜித் இவர்களது புதல்வன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


No comments: