குறிப்பாக மட்டக்களப்பில் கல்வி, சுகாதாரம் , சமூக பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் இக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர்கள, பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஏ. மயூரன் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி. கணேசலிங்கம் கலாரஞ்சினி, தொழில் நுட்ப கல்லூரி அதிபர, ஆசிரிய கலாசாலை பிரதிநிதி, கல்வியற்கல்லூரி பிரதிநிதி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் குறித்த திணைக்களங்களிலே காணப்படுகின்ற பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறை தொடர்பாக தங்களின் வேண்டுகோள்களை முன்வைத்தனர்.
இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு இப் பௌதீக வளங்களுக்கான நிதியினை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது வைத்திய அதிகாரிகள் தாதியர்கள் உதவியாளர்களின் தேவைப்பாடுகள் தற்போதைய நிலைமையில் அவசரமாக தேவைப்படுவதாகவும் அதற்கு மேலதிகமாக கட்டிட வசதிகள் இன்மையால் நோயாளர்களை உரியமுறையில் பராமரிக்க முடியாது உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கருத்து தெரிவித்தார்.
No comments: