News Just In

12/23/2020 06:19:00 PM

கொரோனா தொற்று அச்சம்- சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!


எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகை தருவதை பொதுமக்கள் தவிர்த்து செயற்படுமாறு நுவரெலியாமாவட்ட செயலகம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அபாயம் உள்ளதன் காரணமாக சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகை வருவதை குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் தவிர்த்து செயற்படுமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: