News Just In

12/23/2020 05:58:00 PM

பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய செய்தி...!!


இலங்கையில் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், அனைத்து மாணவர்களையும் அடுத்த தரத்திற்கு உயர்த்துவதற்கு அனுமதிக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.

அது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று பரவல் காரணமாக பாடசாலைகளின் பரீட்சை நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: