News Just In

12/22/2020 07:36:00 PM

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேருக்கு கொரோனா- கிழக்கில் மொத்த எண்ணிக்கை 821ஆக அதிகரிப்பு!!


மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி சுகாதார பிரிவில் இன்று 5 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .

பெரியகல்லாறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .

இதுவரை களுவாஞ்சிக்குடி சுகாதார பிரிவில் 9 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்படுள்ளனர் .

இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது.

No comments: