News Just In

11/10/2020 11:29:00 AM

முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் ஒரு வயதுக் குழந்தை பலி-நால்வர் படுகாயம்!


பதுளை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தொன்றில் ஒரு வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், மேலும் நாவல்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பதுளை - மஹியங்கனை வீதியிலேயே இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஆறு வயது குழந்தையொன்றும், முச்சக்கர வண்டியின் சாரதியும், அவரது மனைவியும் வேறு ஒர் பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: