News Just In

9/13/2020 08:12:00 AM

நேற்று திடீரென அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!- முழு விபரம் வெளியானது!!


நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 23பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,195ஆக அதிகரித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 19 பேரும் குவைட்டில் இருந்து வருகைத் தந்த 2 பேரும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 200பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,983 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 14 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,983 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 12பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: