News Just In

9/27/2020 05:52:00 AM

''வாழும் போதே வாழ்த்தப்படும் சோமசுந்தரம் சிவலிங்கம்'' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற சேவைப்பாராட்டும் பிறந்தநாள் விழாவும்!!


தனது தொண்ணூறாவது அகவையில் காலடி எதுத்து வைக்கும் சோமசுந்தரம் சிவலிங்கம் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வானது நேற்று (2020.09.26) மாலை 6.30 மணியளவில் கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள சன்சைன் கிறண்ட் ஹோட்டலில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மாணிக்க விழாக்காணும் கல்லடியூரின் சிரேஷ்ட பிரஜையான சோமசுந்தரம் சிவலிங்கம் அவர்களை கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை, சங்காரவேல் பவுண்டேசன், கல்லடி விநாயகர் அறநெறி பாடசாலை ஆகியவை இணைந்து இந்த பிறந்தநாள் நிகழ்வையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வையும் நடாத்தின.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையினர், கல்லடி விஷ்ணு ஆலய பரிபாலன சபையினர், கல்லடி விநாயகர் அறநெறி பாடசாலை நிருவாகத்தினர், கல்லடி பேச்சியம்மன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் சங்காரவேல் பவுண்டேசன் நிறுவனத்தினர் என பலரும் கலந்து கொண்டு விழா நாயகனான சோமசுந்தரம் சிவலிங்கம் அவர்களை வாழ்த்தி பாராட்டினர்.

இந்நிகழ்வில் வாழ்த்து செய்தி வழங்கிய மாநகர முதல்வர் கல்லடி மக்கள் ஆரம்பகால பண்பாடுகளை பின்பெற்றுவதை படிப்படியாக குறைத்துக் கொண்டு வருவதாகவும் அந்த பண்பாடுகளை பின்பெற்ற தற்போது உள்ள கல்லடி சிரேஷ்ட பிரஜைகளான சிவலிங்கம் ஐயா போன்றோரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பழைய கால மரபுகள் அழிவடைந்து போவதை தடுக்க முடியாமல் போய்விடும் என்றும் சிவலிங்கம் ஐயா அவர்கள் ஆற்றிவரும் சேவைகள் மற்றும் கல்வி பணிகள் தொடர்பிலும் தனது கருத்துக்களை தெரிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். 























No comments: