News Just In

9/27/2020 06:41:00 AM

மட்டக்களப்பு- தேத்தாத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 13 வயது சிறுவன் பலி!!


மட்டக்களப்பு- தேத்தாத்தீவு பகுதியில் நேற்று (2020.09.26) இடம்பெற்ற விபத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
வீதி ஓரத்தில் நின்ற ஆட்டோ ஒன்றை கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஆட்டொவிற்கு பின்னால் நின்ற 13 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் காத்தான்குடியை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை தேத்தாத்தீவில் வியாபாரம் செய்து கொண்டு இருந்த நேரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

No comments: