News Just In

9/13/2020 07:33:00 PM

மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள கூட்டுத்தாபனத் தலைவர்களின் விசேட கூட்டம்!!


மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள கூட்டுத்தாபனத் தலைவர்களின் விசேட கூட்டம் மாவட்டச் செயஙலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை 11.09.2020 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களின் தலைவர்கள் தமது திணைக்களம் தொடர்பான முன்னேற்ற நடவடிக்கைளையும் மாவட்டரீதியான ஒருக்கிணைப்பு விடயங்களையும் பகிர்ந்து கொண்ட இந்த விஷே‪ட கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் சகல பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், சுகாதாரத்துறை விவசாய கால்நடை நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள், போக்குவரத்து, இடர் முகாமைத்துவ அதிகாரிகள், பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகள் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள், உள்ளிட்ட இன்னும் பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டன.

குறிப்பாக மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் வளப் பங்கீட்டினை மாகாணத்தின் அனுமதியுடன் 5 கல்வி வலயங்களினதும் ஒத்துழைப்புடன் மாவட்ட ரீதியாக நிவர்த்தி செய்வதற்கான தீர்மானங்கள் எட்டப்படன.

மேலும் பாடசாலைகளில் காணப்படும் பௌதீக வளக் குறைபாடுகளும் நிவர்திப்பதற்கு ஆலோசனைகளும் வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்டன.







No comments: