இவ்விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயமடைந்ததோடு, பேருந்துக்காக தரிப்பிடத்தில் காத்திருந்த பாடசாலை மாணவர்கள் மூவருடன் பெண்ணொருவரும் காயமடைந் நிலையில் சிகிச்கைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கரபத்தனையிலிருந்து கொட்டகலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றே வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து தரிப்பிடத்தில் மோதி பத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தால் பேருந்து தரிப்பிடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் திம்புள்ள-பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: