இச்சம்பவம் ஏழு மாதந்ஙகளுக்கு முன்னர் இடம்பெற்றது.
7 மாதங்களுக்கு பினபே வைத்தியசாலையில் கைப்பேசியொன்றை விழுங்கியதாக அனுமதிக்கப்பட்டார் என எகிப்திய ஊடகங்கள் நேற்றுமுன்தினம் தெரிவித்தன.
கெய்ரோ, பென்னாவில் உள்ள அரச வைத்தியசாலையொன்றில் வைத்து மேற்கொள்ள அல்ட்ராசவுண்ட் சோதனையின்போது,
அவரது வயிற்றுக்குள் கைப்பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த பரிந்துரைத்ததாக இதயநோய் நிபுணர் அல் ஜஸார் தெரிவித்தார்.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் நண்பர்களுடன் இருந்தபோது வேடிக்கையாக இந்த கைப்பேசியை விழுங்கியதாகவும்,
இதுவரையில் குடும்பத்தாருக்கு இதனை தெரியப்படுத்திவிக்கவில்லை என்றும் வைத்தியரிடம் மேற்படி இளைஞர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வாய் வழியாக கைப்பேசி வெளியில் வந்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே தான் அதனை விழுங்கியதாக குறித்த இளைஞர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும்,7 மாதங்களாக வயிற்றில் சிக்கியிருந்த அத்தொலைபேசி சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

No comments: