
எமது பிரதேசத்தை நில, நிர்வாக ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கவும் தொடர்ந்து அதனை தக்கவைக்கவும் எமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக அரசியல் அதிகாரம் தேவை அந்த அரசியல் அதிகாரத்தை பெற கூடியதும் சிறப்பாக பயன்படுத்த கூடியதுமான நபர் யாரென தேடினோம்.
அவ் வகையில் கடந்த காலங்களில் தனக்கு கிடைத்த 2 1/2 வருட கால மாகாண சபை உறுப்பினர் பதவியை நன்கு பயன்படுத்தி ஊரில், பிரதேசத்தில் நடைபெற்ற அபிவிருத்தி போல இதுவரை யாரும் செய்யவில்லை என்பது நிதர்சனமான உண்மை. ஒரு மாகாண சபை உறுப்பினரால் இவ்வளவு அபிவிருத்தியை குறுகிய காலத்தில் செய்ய முடியுமானால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக 5வருட காலத்தை வழங்கும் போது எவ்வளவு அபிவிருத்தி நடைபெறும் என்று எண்ணிபார்க்க வேண்டும்.
இ வ் வகையில் வெற்றி வாய்ப்பை கொண்டிருக்கும் வேட்பாளர் என்ற வகையில் இவரின் கரத்தை பலப்படுத்த வேண்டிய தேவைப்பாடும், கடமையும் , நன்றி உணர்வும் எமக்கு உள்ளது. இவைகளை கருத்திற் கொண்டு ஆரையம்பதி, மண்முனை பற்று பிரதேச பொது நல அமைப்புகள் 01/08/2020 சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் ஒரு தீர்க்கமான முடிவினை எடுத்திருக்கிறோம்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இம் மண்ணில் இருந்து தேர்தலில் இறங்கியுள்ள சிறந்த ஆளுமையும், ஆற்றலும், பண்பும் கொண்ட எங்கள் உறவான த.ம.வி.பு கட்சியின் செயலாளரும் வெற்றி வேட்பாளருமான பூ. பிரஷாந்தனை ஆதரிப்பதென தீர்மானித்து, அதனை உங்கள் வரலாற்று கடமையாக ஏற்று அவரின் இலக்கம் 6 இற்கும் அவரின் கட்சி தலைமையான தலைவர் சிவ. சிவசந்திரகாந்தனின் இலக்கம் 8 இற்கும் அவரின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் படகு சின்னத்திற்கும் வாக்களித்து அவரின் கரங்களை பலப்படுத்தி மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அவரை வெற்றி பெறுவதற்கான ஆதரவினை வழங்குவோம் என ஏகோபித்த முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வண்ணம்
ஆரையம்பதி, மண்முனை பற்று,
பொது அமைப்புக்கள்
02/08/2020
No comments: