அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மீறாவோடை மேற்கு வட்டாரக்குழு உப தலைவர் ஏ.எம்.ஜூனைட் நேற்று (19.06.2020) வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஹபீப் றிபானின் வெற்றியை உறுதி செய்வதற்கா இணைந்து கொண்டார்.
நேற்று (19.06.2020) வெள்ளிக்கிழமை இரவு ஓட்டமாவடியில் அமைந்துள்ள ஹபீப் றிபானின் தேர்தல் அலுவலகத்தில் வைத்து இணைந்து கொண்டார்.
இது தொடர்பாக ஏ.எம்.ஜூனைட் கருத்து தெரிவிக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதி நிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் அந்த வெற்றி ஹபீப் றிபானின் வெற்றியாக அமைய வேண்டும் என்பதற்காகவும் எனது ஆதரவினை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசிற்கு வழங்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.

No comments: