News Just In

6/22/2020 01:52:00 PM

வெளிநாடுகளில் உயிரிழந்த பணியாளர்களுக்கு இழப்பீடு


கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ள இலங்கை பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியகத்தின் காப்புறுதி நிதியத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் அதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரசால் வெளிநாடுகளில் பணிபுரிந்த 23 இலங்கை பணியாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: