News Just In

3/04/2020 11:32:00 AM

தொலைபேசி சின்னத்தில் களமிறங்குகின்றது சஜித் அணி!


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணி தீர்மானித்துள்ளது.

கூட்டணியின் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார இதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

அண்மைக்காலமாகவே ஐக்கிய தேசிய கட்சிக்குள் ரணில் அணி மற்றும் சஜித் அணி என இரண்டு அணிகள் செயற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: