
மட்டக்களப்பு-நாவற்குடா பிரதான வீதியில் காருடன் ஹென்ரர் ரக வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று(01.02.2020) காலை வேளையில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திருமண நிகழ்விற்கு சென்ற கார் இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தின் போது கார் பிரதான வீதியின் நடுப்பகுதியில் உள்ள கட்டின் மேல் ஏறி மறு பாதையில் வந்து நின்றதாக விபத்தினை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.
வாகனங்களில் பயணித்தவர்கள் எவருக்கும் பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில், இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணையினை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.









No comments: