News Just In

3/09/2020 09:40:00 AM

மட்டு தனியார் பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!!

தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை நாட்டில் தடுத்து வைக்கும் பணிகள் இன்று (9) ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.

இதன் முதல் கட்டம் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக வைத்தியசாலை மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலும் ஆரம்பமாகவுள்ளது. இந்த தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் உள்வாங்கப்படும் நோயாளர்கள் அவசியம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவர்.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு தொடர்பான தலைமை அதிகாரி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 

இந்த மத்திய நிலையங்களில் கொரோனா பாதிப்பற்ற நபர்கள் மாத்திரம் உள்வாங்கப்படுவார்கள், எவருக்காயினும் கொரோனா அறிகுறிகள் காணப்படுமாயின் அவசியம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்ட 8 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் இவர்களில் எவருக்கும் கொரோனா நோய் தாக்கம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.

No comments: