வாழ்வாதார திட்டங்களை அதனை பெறுகின்ற பயனாளிகள் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் பெண்கள் தலைமைதாங்கும் 30 குடும்பங்களிற்கு பல்வேறுபட்ட வாழ்வாதாரங்களை கடந்த வாரம் வழங்கி வைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
எமது அமைப்பால் மட்டுமன்றி பல அமைப்புக்களினால் வாழ்வாதார திட்ட உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றது. அவையனைத்தையும் உச்சளவு பயன்பெற வேண்டும். அவ் வாழ்வாதார உதவிகளில் இருந்து மேனோக்கி செல்ல வேண்டும்.
அதனூடாக தங்களது குடும்ப செலவீனத்தை பெறுவதற்கும் அதற்குமேல் சிறு தொகையை சேமிப்பாகவோ அல்லது தங்களது சுயதொழில் மேம்பாட்டிற்காகவோ பெற வேண்டும் எனவும், அவ் உதவிகளை உதாசீனம் செய்வதோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ கூடாது எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது கிராம பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகளின் குடும்பம் என பலரும் கலந்துகொண்டனர்.
3/05/2020 03:35:00 PM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
வந்தாறுமூலை
/
வந்தாறுமூலையில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினரால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு
வந்தாறுமூலையில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினரால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)





No comments: