குவைத் அரசாங்கத்தின் சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், லெபனான், சிரியா மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து குவைத் நாட்டுக்கு வரும் மற்றும் வெளியேறும்
அனைத்து விமானங்களும் 2020 மார்ச் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக அந்நாட்டு சிவில் விமான சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் அறிவித்தள்ளார்.
இதேபோன்று குவைத் நாட்டில் செல்லுபடியான வதிவிடம் அல்லது முன் பிரவேசிப்பதற்கான விசா அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ள எத்தகைய நாட்டவருக்கும் கடந்த 2 வார காலத்திற்குள் குறிப்பிடப்பட்ட நாடுகளில் தங்கி இருந்து ஏனைய விமான நிலையங்களில் இருந்து குவைத் நாட்டுக்கு வருவதும் தடை செய்யப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/08/2020 12:52:00 PM
குவைத் நாட்டுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: