News Just In

3/06/2020 09:25:00 AM

மூவினங்களையும் சேர்ந்த 856 மாணவர்களுக்கு புலமைத்தாரகை விருது வழங்கும் விழா

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐந்தாந்தர புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற மூவின மாணவர்களையும் பாராட்டி, பதக்கமணிவித்து, சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை 09.03.2020 காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் காலை 10.30 மணி முதல் இடம்பெறவுள்ளதாக கல்வி அபிவிருத்திச் சபையின் தேசிய இணைப்பாளர் ஏ.சி.எம். பாயிஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலிருந்து, தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சுமார் 856 மாணவ மாணவிகள் இந்நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வி அபிவிருத்திச் சபை நடத்தும் 16வது விருது வழங்கும் விழா இதுவாகும். கல்வி அபிவிருத்திச் சபையின் (Educational Development Forum) தேசியத் தலைவர் எஸ்.எல். மன்சூர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையின்போது புலமை காட்டிய மாணவ மாணவியரின் புகைப்படங்களையும் சிறப்புக் கட்டுரைகளையும் தாங்கிய 'புலமைத் தாரகை' எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: