News Just In

3/04/2020 05:12:00 PM

மட்டக்களப்பில் 5 பேரை மடக்கி பிடித்த பொலிஸார்!!


மட்டக்களப்பு-காத்தான்குடியில் கஞ்சா போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த 5 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா போதைப்பொருட்களுடன் இருவரும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இருவரும் கைது செய்யபபட்டுள்ளனர்.

காத்தான்குடி காவற்துறை பிரிவிற்குட்பட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கைகளின் போது அவர்கள கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

No comments: