News Just In

3/04/2020 06:17:00 PM

மட்டக்களப்பில் பட்டதாரிகள் தொடர்பாக இன்று வெளியான செய்தி- 44 பேருக்கே நியமனம்!


மட்டக்களப்பில் உள்ள பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் குறித்த சிலருக்கு மாத்திரம் கிடைத்த நிலையில் இன்று வெளியாகிய செய்தி அவர்களுக்குள் முரண்பாட்டை தோற்றுவிப்பதாக இருந்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் நியமனங்கள் ஏதும் வழங்க இயலாது, அத்துடன் பட்டதாரிகளுக்கான நியமனத்தினை இரண்டு மாதகாலம் பிற்போட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என செய்திகள் வெளியாகின.

இச் செய்தியினை தொடர்ந்து ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் பட்டதாரிகளுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க கோரி செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் இவர்களுக்கான நிரந்தர நியமனம் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் இதுவரை 44 பட்டதாரிகளுக்கே நியமனக் கடிதம் வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது, இதில் நேற்று 02 பட்டதாரிகளுக்கும்  இன்று 42 பட்டதாரிகளுக்குமாக மொத்தம் 44 பேருக்கு நியமனக் கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. தொடர்ந்து நாளையும் நியமனக் கடிதங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியமனக் கடிதம் கிடைக்கப்பெற்ற பட்டதாரிகள் நேற்றும், இன்றும் நியமனக் கடித்தத்துடன் பிரதேச செயலகங்களில் இணைத்துள்ளனர். இருந்தும் சில பிரதேச செயலகங்களில் அவர்களை இரண்டு மாதகாலத்தின் பின்னர்தான் தொடர்ச்சியாக பணியில் அமர்த்த முடியும் என சேர்ந்தமைக்குரிய கையெழுத்து மாத்திரம் பெறப்பட்டு திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் கடிதம் கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் உட்பட  கிடைக்கப்பெற்றவர்ளும் குழப்ப நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இது போன்ற குழப்ப நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது செயற்த்திட்ட உதவியாளர் உட்பட சில நியமனங்கள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தலைமைத்துவ பயிற்சியா..? அல்லது இரண்டுமாதம் கழித்து நியமனமா..? அல்லது அரசியல் மாற்றத்தால் நியமனம் தடைசெய்யப்படுமா..? எனும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ள பட்டதாரிகளின் நிலைமையினை கருத்தில் எடுத்து சரியான தீர்வினை அரசு முன்வைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments: