கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவ ஆரம்பகட்ட செயற்பாடுகள் பற்றிய இரண்டாம் கட்டமான கலந்துரையாடல் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வணபிதா ஜெபரட்ணம் அடிகளார், யாழ் இந்திய துணைத்தூதரக அதிகாரி எம்.கிருஷ்ணமூர்த்தி, கடற்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டார்கள்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பங்குனி மாதம் ஏழாம் திகதி நடைபெறவுள்ளது. உற்சவத்திற்கு முதல் நாள் ஆறாம் திகதியிலிருந்து யாழ்ப்பாணத்திலிருந்து கச்சத்தீவிற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் நீர்வசதி, உணவு, கூடார வசதி, ஆலய சுற்றுச் சூழல் அலங்காரம், ஒளி ஒலி வசதிகள், வீதிப் போக்குவரத்து, கடல் போக்குவரத்து ,பாதுகாப்பு வசதி ,வங்கி வசதி போன்றவை தொடர்பில் உரிய தரப்பினருடன் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்துடன் உற்சவகாலத்தின் போது பொலித்தீன் பாவனைகளை கட்டுப்படுத்தல், கொறனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.



No comments: