News Just In

2/16/2020 07:50:00 AM

மக்களுக்கு வருகின்ற அபிவிருத்திகளை சுயலாபத்திற்காக தடுத்து நிறுத்துவது ஏற்புடையதல்ல-சாணக்கியன்

மக்களுக்கு வருகின்ற அபிவிருத்திகளை தடுத்துநிறுத்துவது ஏற்புடையதல்ல என இராசாமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்போரதீவு உதயதாரகை விளையாட்டு கழகத்திற்கு காற்பந்தாட்ட பாதணிகள் வழங்கி வைக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரசியலில் வாக்களிப்பது, ஆதரவு தெரிவிப்பது என்பதெல்லாம் ஜனநாயகம். அதற்கும் மக்களுக்கு வருகின்ற அபிவிருத்திக்கான நிதியினை இடைநிறுத்துவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உதயதாரகை விளையாட்டு கழக மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு மில்லியன் நிதித்தொகை அரசியல்வாதியொருவரின் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய விடயம்.

இவ்வாறான செயற்பாடுகளை அரசியல் வாதிகள் செய்வதை நிறுத்தி பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் அபிவிருத்தி சென்றடைய வேண்டுமென்ற மனநிலைக்கு மாற்றமடைய வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட கழக உறுப்பினரும், பட்டிருப்பு கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர் (உடற்கல்வி) T.இதயகுமார் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments: