கிராமியப் பொருளாதாரத்திற்குக் கரங்கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் காவியா பெண்கள் சுயதொழில் ஊக்குவிப்பு அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் மேற்படிக் கண்காட்சியும் விற்பனை சந்தையும் இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பில் 3,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள காவியா பெண்கள் சுயதொழில் ஊக்குவிப்பு அமையத்தின் தவிசாளர் யோகமலர் அஜித்குமார் தலைமையில் இடம்பெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சண்முகராஜா, மட்டக்களப்பு வர்த்தக சம்மேளனத்தின் நிறைவேற்று உத்தியோகத்தர் கே.குகதாசஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மூன்று நாட்களாக இடம்பெற்றுவரும் இக்கண்காட்சியானது நாளை (16) வரை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















No comments: