கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் அச்சத்தினால் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என வட கொரியா நாட்டை சேர்ந்த செய்தி நிறுவனம் தகவல் வௌியிட்டுள்ளது.
சமீபத்தில் சீனாவிற்கு சென்று நாடு திரும்பிய வட கொரியா நாட்டை சேர்ந்த வர்த்தக அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனும் சந்தேகம் வடகொரிய அதிகாரிகளுக்கு ஏற்பட்டதனால் அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தி இருந்தனர்.
ஆனால் குறித்த நபர் பொது இடத்தில் உள்ள குளியல் அறைக்கு சென்ற தகவலறிந்த பொலிஸார் அந்நபரை கைது செய்ததுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து கொரோனா வைரஸ் பிறருக்கு பரவி விடும் என்பதனாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2/15/2020 02:06:00 PM
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒருவர் சுட்டுக் கொலை!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: