News Just In

2/15/2020 04:25:00 PM

வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி காரில் மோதி மரணம்!

வீதியை கடக்க முற்பட்டபோது கார் மோதியதில் சிறுமியொருவர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தானது வெல்லவாய - வீரவில வீதியின் குடாஒய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 05 வயதுடைய ஊவ குடாஒய, ஹல்மில்ல வெவ பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் குடாஒய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: