News Just In

2/15/2020 06:14:00 PM

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வுகள்

இன்று 15.02.2020 மட்டக்களப்பு திருமலை வீதி, பிள்ளையாரடியில் அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வு மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் திரு. சரவணபவன், மற்றும் கௌரவ அதிதிகள், மற்றும் மட்டக்களப்பு தமிழ்சங்க செயலாளர் வே. தவராஜா, மட்டக்களப்பு தமிழ்சங்க பொருளாளர் தேசபந்து மு. செல்வராஜா மற்றும் சங்க முன்னாள் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு, கட்டிட திறப்பு, மாணவர்களின் கலை நிகழ்வுகள், அதிதிகள் உரைகள், நூல் வெளியீட்டு, கட்டிட நிதி வழங்குநர்களுக்கான கௌரவிப்பு போன்றன இடம்பெற்றத்துடன், தமிழ் சங்கத்தின் நூல் வெளியீட்டு விழாவும் இடம்பெற்றது.








































No comments: