News Just In

2/15/2020 08:45:00 PM

குழந்தைகள் காப்பகத்தில் தீ விபத்து-15 குழந்தைகள் பலி!

குழந்தைகள் காப்பகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் பெற்றோரை இழந்த குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு 66 குழந்தைகள் வசித்து வந்தனர்.

அந்த காப்பகம் மொத்தம் இரண்டு தளங்களை கொண்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ மளமளவென இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் குழந்தைகள் அனைவரும் காப்பக கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் சிக்கி இருந்த குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பல குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், இந்த கோர தீ விபத்தில் சிக்கி 15 சிறுவர்கள் மூச்சுத் திணறியும், தீயில் கருகியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments: