இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடுமையான பதிலை சமர்ப்பித்துள்ளது.
அடிப்படையற்ற விடயங்களை முன்வைத்து அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இராணுவத் தளபதிக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. இலங்கையின் முன்னாள் அரச தலைவர் இவரை இராணுவ தளபதியாக நியமித்தார். சேவை மூப்பின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவரின் இறைமையை வெளிநாடுகள் கேள்விக்கு உட்படுத்துவது கவலைக்குரியதாகும் என்று வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2/15/2020 01:30:00 PM
இராணுவத் தளபதி அமெரிக்கா செல்லத் தடை!-அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: