News Just In

2/15/2020 12:45:00 PM

கட்டுத்துவக்கு வெடித்ததில் சகோதரர்கள் இருவர் படுகாயம்!

கட்டுத்துவக்கு வெடித்ததில் சகோதரர்கள் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் நேற்று இரவு (14) இடம்பெற்றுள்ளது.

கால்நடைகளுடன் சென்றபோது, வேட்டையாட பொறி வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததிலேயே இரு சகோதர்களும் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

தர்மபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: