News Just In

2/15/2020 12:00:00 PM

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக தரமுயர்த்தப்பட்டது!

-நூருல் ஹுதா உமர்-
பிரதேச வைத்தியசாலை தரம் B ஆக இருக்கும் சாய்ந்தமருது வைத்தியசாலையை தரம் A ஆக தரமுயர்த்தும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று 15 (சனிக்கிழமை) காலை 09.00 மணியளவில் சாய்ந்தமருது வைத்தியசாலையில் நடைபெற்றது.

வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் முயற்சியின் காரணமாக, முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது பதவிக் காலத்தில் முன்னெடுத்த செயற்பாடு அத்துடன் சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பெறப்பெற்றதே இந்த தரமுயர்வாகும்.

வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் திரு. மிஹ்லார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல். அலாவுதீன் பிரதம அதிதியாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

மேலும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.வை.எம். ஹனீபா, முன்னாள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அசீம், வைத்தியர்கள், முக்கிய பிரமுகர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

No comments: