News Just In

2/15/2020 09:16:00 AM

மட்டக்களப்பில் மின் கம்பிகளை பாதிப்பதனால் வெட்டப்படும் மரக்கிளைக் கழிவுகளுக்கு யார் பொறுப்பு?

மின் கம்பிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மரங்களையும், கிளைகளையும் இலங்கை மின்சாரசபை வெட்டிவிடுகின்றது. இவ்வாறு வெட்டப்படும் மரங்களும், கிளைகளும் வெட்டப்பட்ட இடங்களில் இருந்து அகற்றப்படாமல் பல நாட்களாக தேங்கிக்கிடக்கின்றன.

மாநகரசபையானது வாரத்திற்கு ஒரு தடவை குப்பை அகற்றும் நடவடிக்கையின்போதே குப்பைகளை அகற்றுகிறது.

எனினும், வெட்டப்படும் மரங்களும், கிளைகளும் அகற்றப்படாமல் இவ்வாறு வீதிகளில் தேங்கிக்கிடப்பதனால் குறித்த வீதிகளில் பயணிக்கும் பாதசாரிகளும், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றில் பயணிப்போரும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதுடன் வீதி விபத்துக்களும் ஏற்படுகின்றன.

மின்சார சபையினால் வீதிகளில் வெட்டி இடப்படும் மரங்கள் மற்றும் கிளைகளை அகற்றுவது யார்? காணிக்கு சொந்தக்காரரா? மாநகர சபையா? அல்லது மின்சார சபையா? என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

சம்பந்தப்பட்டவர்கள் இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வீதியில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுப்பார்களா?

No comments: