News Just In

2/15/2020 12:00:00 AM

கணேசமூர்த்தி சசீந்திரன் சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்


வவுணதீவு இளைஞர் சேவை உத்தியோகத்தர் கணேசமூர்த்தி சசீந்திரன் சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திலேயே இவ்வாறு சமாதான நீதிவானாக சத்தியப்பிரமானம் செய்த கொண்டார்.

மட்டக்களப்பு துறைநீலாவணையை பிறப்பிடமாகக் கொண்ட சசீந்திரன் ஆரம்பக்கல்வியை துறைநீலாவணை மெதடிஸ்தமிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர்தரம் கலைப்பிரிவு துறைநீலாவணை மகாவித்தியாலயத்திலும் பயன்றுள்ளார்.

அத்துடன் துறைநீலாவணை நவசக்தி இளைஞர் கழக ஸ்தாபகராகவும், சுதந்திர ஊடகவியாலாளராகவும், கடந்த ஆண்டு முதல் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி செயலாளராகவும் தனது சமுக மற்றும் அரசியல் சார் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அதுமட்டுமன்றி 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்தின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: