தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்னதாக வாழைச்சேனை , வவுணத்தீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.
இதேவேளை , கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு , உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் கணபதிப்பிள்ளை மகேசன் செயற்பட்டுள்ளார்.

No comments: