News Just In

2/16/2020 11:14:00 AM

சிறுமி மற்றும் யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையர்கள் இருவர் கைது!

14 வயதுடைய சிறுமி மற்றும் 17 வயது யுவதி ஆகியோரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையர்கள் இருவரை உறவினரின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
வவுனியா, செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியினை அவருடைய தந்தை கடந்த சில நாட்களாக வீட்டில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த நிலையில் குறித்த சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்

குறித்த சிறுமியின் தந்தையை (41 வயது) பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று, மாங்குளம் பகுதியில், 39 வயதான தந்தை தன்னுடைய மகளான 17 வயது யுவதியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதில் குறித்த யுவதி கர்ப்பம் தரித்துள்ளார்.

இது தொடர்பான மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் யுவதியின் தந்தையை பொலிஸார் கைது செய்ததுள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட இருவரும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் கைதுசெய்யப்பட்ட வர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: