News Just In

2/16/2020 10:15:00 AM

ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை வெளியீடு! முதல் போட்டியில் மோதும் சென்னை-மும்பை அணிகள்!!

ஐபிஎல் 2020க்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. மார்ச் 29 ஆம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், சியர் கேர்ள்ஸ், ஆட்டம், பாட்டம், மக்கள் கூட்டம் என கொண்டாட்டமாக நடைபெறும் திருவிழா ஐபிஎல் கிரிக்கெட். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் இந்த போட்டிகளில் விளையாடும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

இந்நிலையில் 13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தாண்டு மார்ச் 29-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐபிஎல்லில் புதியதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அண்மையில் தங்களுக்கான புதிய லோகோவை வெளியிட்டனர்.

இந்நிலையில் மும்பையில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

No comments: