கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,662 ஆக அதிகரித்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ள நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் இதுவரை 1,662 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் மருத்துவர்களுக்கும், தாதிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதால் பெரும் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந் நிலையில், சீனாவில் 1700-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: