News Just In

2/12/2020 12:06:00 PM

ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை அறிமுகம்

ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் பிரவேச அட்டையை அறிமுகப்படுத்துவதற்கும் இரயில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்கு Online முறை ஒன்றை அறிமுகம் செய்வதற்கும் கட்டமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பு கிடைத்திருப்பதாக பயணிகள் போக்குவரத்து , மின்சக்தி , சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விரையில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இரத்மலானை ரயில் பிரிவின் செயற்பாடுகளை கண்டறிவதற்காக நேற்று அமைச்சர் அங்கு விஜயம் செய்தார்.

No comments: