இன்று (13) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சூரியவெவ, பெத்தேவெவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 27 வயதுடையவர், சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பணப் பிரச்சினை காரணமாக உயிரிழந்தவரின் சகோதரரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு மேற்கொண்டவர் பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ள நிலையில், குறித்த நபரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2/13/2020 02:19:00 PM
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி!-சகோதரன் தப்பியோட்டம்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: