News Just In

2/15/2020 10:33:00 AM

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கபடி போட்டிக்கு தெரிவான விளையாட்டு கழகத்திற்கு உதவி வழங்கிவைப்பு!

இலங்கை கபடிச் சங்கத்தினால் நடாத்தப்படும் போட்டிக்கு மட்டக்களப்பு வெற்றி விளையாட்டு கழகத்தினர் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர்.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் நேரில் சென்று அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் அவர்களுக்கான பயணத்திற்கான செலவுத் தொகையையும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு வழங்கி வைத்தது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் அவர்கள் கலந்துகொண்டு கபடி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments: