News Just In

2/14/2020 01:12:00 PM

திடீர் சுகயீனம் காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி


திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கந்தகெடிய , கந்தகெபுஉல்பத வித்தியாலயத்தின் 15 மாணவர்கள் இன்று (14) காலை கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல நாட்களாக மூடப்பட்டிருந்த பாடசாலையின் வகுப்பறை ஒன்றை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது மாணவர்களின் உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள் ஏற்பட தொடங்கியதன் காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12 மாணவர்களும் மற்றும் 3 மாணவிகளும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டதாகவும் ,  இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

No comments: