News Just In

2/06/2020 09:23:00 AM

திருகோணமலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 10 பேர் படுகாயம்!


திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதனாலேயே இன்று(வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









No comments: