மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாம் கட்டை பிரதேசத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 55 வயதான தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு சடலமாக வீதி மருங்கிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் சார்ஜன்ட் தனது பண்ணையைப் பார்வையிடுவதற்காக நேற்றிரவு (05) சென்றிருந்த நிலையில் இனந்தெரியாத நபர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவருகின்றனர்.
No comments: